பிரவீண் நெட்டார் மனைவிக்கு முதல்-மந்திரி அலுவலகத்தில் வேலை


பிரவீண் நெட்டார் மனைவிக்கு முதல்-மந்திரி அலுவலகத்தில் வேலை
x

பிரவீண் நெட்டார் மனைவிக்கு முதல்-மந்திரி அலுவலகத்தில் வேலை வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரி கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீண் நெட்டார் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையால் கொதித்து எழுந்த பா.ஜனதா இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி நிர்வாகிகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் சொந்த கட்சியினரே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரவீண் நெட்டாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவரது மனைவிக்கு முதல்-மந்திரி அலுவலகத்தில் வேலை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். இந்த நிலையில் பிரவீண் நெட்டாரின் மனைவி நுதனகுமாரிக்கு முதல்-மந்திரி அலுவலகத்தில் சி பிரிவு வேலை வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரத்து 350 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story