கர்ப்பிணியின் முகத்தை மார்பிங் செய்து முகநூலில் பதிவு: சமூக ஆர்வலர் அதிரடி கைது
கர்ப்பிணியின் முகத்தை மார்பிங் செய்து முகநூலில் பதிவு செய்த சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு:
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே எடபதவு பகுதியை சேர்ந்த ஒரு பெண் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் மங்களூருவை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான சுனில் பசிலகேரி என்பவர், அந்த கர்ப்பிணி பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து சிறுத்தை முகத்தை ஒட்டியுள்ளார். அந்த படத்தை தனது முகநூலில் பதிவு செய்த சுனில் பசிலகேரி, நமீபியா சிறுத்தைக்கு சீமந்தம் எப்போது என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் எடபதவு கிராமத்தை சேர்ந்த பெண், இந்திய கலாசாரத்தை சுனில் பசிலகேரி அவமதித்து இருப்பதாக கூறி மங்களூரு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக ஆர்வலர் சுனில் பசிலகேரியை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story