பலியான கர்ப்பிணி பெண்ணின் மகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்


பலியான கர்ப்பிணி பெண்ணின்  மகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
x

துமகூருவில் பிரசவம் பார்க்க மறுத்ததால் சிசுக்களுடன் கர்ப்பிணி பெண் இறந்த விவகாரத்தில் அவரது மகளான பெண் குழந்தைக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வழங்கினார்

பெங்களூரு: துமகூருவில் பிரசவம் பார்க்க மறுத்ததால் சிசுக்களுடன் கர்ப்பிணி பெண் இறந்த விவகாரத்தில் அவரது மகளான பெண் குழந்தைக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வழங்கினார்

கண்காணிக்க குழு

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று துமகூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு அவர் நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

துமகூரு மாவட்ட ஆஸ்பத்திரி மற்றும் தாலுகா ஆஸ்பத்திரிகளில் நடைபெறும் பிரசவங்கள் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்படும். தவறுகள் நடைபெறாமல் பிரசவங்கள் நடப்பதை அந்த குழு உறுதி செய்ய வேண்டும். அந்த குழு அடிக்கடி கூடி ஆலோசனை நடத்த வேண்டும். மாவட்ட ஆஸ்பத்திரியில் 42 மருத்துவ நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். 2 நிபுணர்கள் பணியிடம் காலியாக உள்ளது. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ ஊழியர்கள்

இங்கு 400 படுக்கைகள் உள்ளன. அதற்கேற்றவாறு மருத்துவ ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையத்தில் 24 மணி நேரமும் 4 பேர் பணியாற்றுவார்கள். துமகூருவில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆஸ்பத்திரி அமைக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளோம். 100 படுக்கைகளுடன் அவசர சிகிச்சை ஆஸ்பத்திரியும் துமகூருவில் தொடங்கப்படுகிறது. ரூ.20 கோடியில் புதிய நர்சிங் கல்லூரி இங்கு தொடங்கப்படுகிறது.

ரூ.10 லட்சம்

288 நம்ம கிளினிக் மையங்கள் தயாராக உள்ளன. இந்த மாதத்திற்குள் இந்த நம்ம கிளினிக்குகள் மருத்துவ மையத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். இதில் துமகூருவில் மட்டும் 10 கிளினிக்குகள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

துமகூருவில் சமீபத்தில் பிரசவம் பார்க்க மறுத்ததால் கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண் மற்றும் 2 சிசுக்கள் உயிரிழந்தனர். அந்த பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அனாதையான அந்த பெண்ணின் பெண் குழந்தைக்கு, மந்திரி சுதாகர் நேற்று ரூ.10 லட்சம் உதவி வழங்கினார். அந்த தொகை அந்த குழந்தைகளின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக வைக்கப்படும். 18 வயது பூர்த்தியான பிறகு அந்த தொகை அந்த குழந்தைக்கு வழங்கப்படுகிறது.


Next Story