தாவணகெரேயில் 50 ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைப்பு: சித்தராமையா பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்


தாவணகெரேயில் 50 ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைப்பு:  சித்தராமையா பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
x

தாவணகெரேயில், சித்தராமையா பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையாவின் 75-வது பிறந்தநாள் விழாவை, அவரது ஆதரவாளர்களான முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாடுவதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. வருகிற 3-ந் தேதி தாவணகெரே மாவட்டம் புறநகர் குந்துவாடா அருகே 50 ஏக்கர் நிலப்பரப்பில் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தலைவர்கள் அமர்ந்து கொள்வதற்காக பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் போடப்பட்டு வருகிறது.இந்த பிறந்தநாள் விழாவில் 5 முதல் 6 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 4 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.


5 லட்சம் பேருக்கு பலாவ், தயிர் சாதம் மற்றும் பஜ்ஜி வழங்கப்பட இருக்கிறது. வாகனங்கள் நிறுத்துவதற்காக விழா நடைபெறும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதால், விழா நடைபெறும் பகுதியிலேயே ஹெலிபேடு அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. வருகிற 3-ந் தேதி காலை 10 மணியில் இருந்தே விழா தொடங்குகிறது. 2 மணி நேரம் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story