சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனம்- கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்


சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனம்- கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
x

கொலீஜியம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனம்- கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனம்- கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வருகிற பங்கஜ் மித்தல் (ராஜஸ்தான்), சஞ்சய் கரோல் (பாட்னா), சஞ்சய் குமார் (மணிப்பூர்) மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் அசனுதீன் அமானுல்லா (பாட்னா), மனோஜ் மிஸ்ரா (அலகாபாத்) ஆகிய 5 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

தொடர்ந்து, கடந்த மாதம் 31-ந் தேதியன்று, அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலையும், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமாரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். புதிய நீதிபதிகள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளனர். அவர்கள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும்.


Next Story