சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு


சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தியடிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தியுள்ளார்

புதுடெல்லி:

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காந்தியடிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில்,

'மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளில், சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். காந்தி ஜெயந்தி என்பது, அமைதி, சமத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் காந்தியடிகளின் எழுச்சியூட்டும் வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு நாம் அனைவரும் நம்மை மீண்டும் அர்ப்பணிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story