சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்


சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்
x
தினத்தந்தி 14 Aug 2022 1:46 PM IST (Updated: 14 Aug 2022 1:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழக காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவது தலைசிறந்த சேவைக்கான போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல ஜனாதிபதி பதக்க பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது .

அதில் தமிழக காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏடிஜிபி சங்கர் ,உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி ,சேலம் துணை ஆணையர் மாடசாமி ஆகியோருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story