ஜனாதிபதி தேர்தல்: தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர் - தேர்தல் ஆணையம்


ஜனாதிபதி தேர்தல்: தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர் - தேர்தல் ஆணையம்
x

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் வாக்காளர்கள் பட்டியலில் மொத்தம் உள்ள 4796 வாக்காளர்களில் 99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 4-5 மணி வரை வாக்களிக்க நேரம் அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தனது வாக்கை பதிவு செய்தனர்.

இந்த தேர்தலில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 4,800 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களித்தார்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் வாக்காளர்கள் பட்டியலில் மொத்தம் உள்ள 4796 வாக்காளர்களில் 99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

கோவா, குஜராத், இமாசலபிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம், சண்டிகர் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்கள்(100 சதவீதம்) வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, ஜூலை 21-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அடுத்த ஜனாதிபதி ஜூலை 25-ம் தேதி பதவியேற்பார்.


Next Story