நாட்டில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்காகிவிட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


நாட்டில் வேலைவாய்ப்பின்மை  2 மடங்காகிவிட்டது  - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் அளவை வெளிப்படுத்தும் சிஐஎம்இஅமைப்பின் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 2017-18 நிதி ஆண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் விகிதம் 21 சதவீதமாக இருந்துள்ளது. அது, 2018-19ல் 30 சதவீதமாகவும், 2019-2020ல் 37 சதவீதமாகவும், 2020-21ல் 39 சதவீதமாகவும், 2021-22ல் 42 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னாயிற்று என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருப்பதையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50 ஆக இருந்தபோது இந்திய பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதாகவும், 60 ஆக இருந்தபோது அவசரநிலை சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் விமர்சித்த பாஜக, தற்போது 80 ஆக இருப்பதற்கு என்ன கூறப் போகிறது என கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story