ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி பயணம்


ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி பயணம்
x

Image Courtesy : PTI 

தினத்தந்தி 23 Jun 2022 1:37 AM GMT (Updated: 23 Jun 2022 1:39 AM GMT)

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி செல்கிறார்

புதுடெல்லி,

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி செல்கிறார் .என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த கூட்டதில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது .

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜெர்மனியில் ஸ்க்லோஸ் எல்மாவ், ஜெர்மன் பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார். ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஜூன் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். என கூறப்பட்டுள்ளது.


Next Story