பிரதமர் மோடி வருகை எதிரொலி: பெங்களூரு-ஐதராபாத் நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை நிறுவப்பட உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான திறப்புவிழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி விமான நிலையம் செல்லும் சாலையில் புனரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. குறிப்பாக சாலையில் உள்ள சேதங்களை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விமான நிலையம் செல்லும் சாலையான பெங்களூரு-ஐதராபாத் சாலையில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு பணிகள் நடந்துவருகிறது. பிரதமர் மோடி வருகை தர உள்ளதால் அந்த சாலையில் பணிகள் நடப்பதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், அந்த சாலையில் உள்ள இரும்பு தடுப்புகள் இடமாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.