மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்க பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்


மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்க பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்
x

மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்க பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இம்பாலா ,

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது.

டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்துள்ளது. இதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றும் முழு வடகிழக்கு மாநிலத்திலும் மொபைல் சேவைகள் சேவைகள் நிறுத்தப்பட்டன.நிலைமை பதற்றமாகவே உள்ளது.

.வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்க பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடுலா டுவிட்டர் பதிவில் .

மணிப்பூரின் சட்டம் ஒழுங்கு நிலைமை வேகமாக மோசமடைந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.அங்கு அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். மணிப்பூர் மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story