திடீரென காரை நிறுத்த சொன்ன பிரதமர் - பெண் கொடுத்த சர்ப்ரைஸ்


திடீரென காரை நிறுத்த சொன்ன பிரதமர் - பெண் கொடுத்த சர்ப்ரைஸ்
x

இமாச்சல்பிரதேசத்தில், பிரதமர் மோடிக்கு அவரது தாயின் ஓவியத்தை, பெண் ஒருவர் பரிசாக அளித்துள்ளார்.

சிம்லா,

இமாச்சல்பிரதேசத்தில், பிரதமர் மோடிக்கு அவரது தாயின் ஓவியத்தை, பெண் ஒருவர் பரிசாக அளித்துள்ளார். பாஜக ஆட்சியமைத்து 8 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சிம்லா சென்றுள்ளார்.

அங்கு மாநாட்டிற்கு செல்லும் வழியில் சாலையில் இருபுறமும் குவிந்திருந்த பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தனது தாயாரான ஹீராபென்னின் ஓவியத்தை பரிசளிக்க, பெண் ஒருவர் சாலையோரம் நின்றிருந்ததை கண்ட பிரதமர் காரை நிறுத்தி அதனை பெற்றுக்கொண்டு அப்பெண்ணிற்கு பாராட்டு தெரிவித்தார்.


Next Story