2019ஆம் ஆண்டிலேயே ரூ.2000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் - மத்திய அரசு


2019ஆம் ஆண்டிலேயே ரூ.2000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் - மத்திய அரசு
x

ரூ .2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019 ஆம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதாக கருத்து நிலவியது.இந்த நிலையில் ரூ .2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019 ஆம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புதிய 2000 நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளது .


Next Story