கைதிக்கு செல்போன் கொடுத்த 3 பேர் கைது
கைதிக்கு செல்போன் கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டுக்கு விசாரணை கைதியான கார்த்திக் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்து இருந்தனர். அப்போது கார்த்திக்கை நோக்கி 3 பேர் ஒரு கவரை வீசினர். அந்த கவரை கார்த்திக் எடுத்தார். இதனை கவனித்த போலீஸ்காரர் லோகேஷ் என்பவர் கவரை பிரித்து பார்த்த போது கவருக்குள் செல்போன், 2 சிம் கார்டுகள் இருந்தன. இதுபற்றி கார்த்திக்கிடம் விசாரித்த போது 3 பேரும் தனக்கு செல்போன் வினியோகம் செய்ததாக கூறினார்.
உடனடியாக செல்போனையும், சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்த போலீஸ்காரர் லோகேஷ் அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் சம்பவம் குறித்து அவர் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திக்கிற்கு செல்போன் கொடுத்த 3 பேரை கைது செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story