அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மகப்பேறு விடுப்பை 9 மாதங்களாக உயர்த்த வேண்டும் நிதி ஆயோக் உறுப்பினர் சொல்கிறார்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மகப்பேறு விடுப்பை 9 மாதங்களாக உயர்த்த வேண்டும் நிதி ஆயோக் உறுப்பினர் சொல்கிறார்
x
தினத்தந்தி 16 May 2023 1:15 AM IST (Updated: 16 May 2023 1:19 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

புதடெல்லி,

நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதை 9 மாதங்களாக உயர்த்துவது குறித்து தனியார் மற்றும் பொதுத் துறைகள் பரிசீலிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சிறந்த வளர்ப்பு மற்றும் முதியோர் பராமரிப்புக்கு தேவையானவற்றைச் செய்வதன் மூலமும், குழந்தைகளுக்கான கூடுதல் காப்பகங்களைத் திறப்பதன் மூலமும் குழந்தைகளின் விரிவான பராமரிப்பை வடிவமைக்க நிதி ஆயோக்கிற்கு தனியார் துறை உதவ வேண்டும். எதிர்காலத்தில் லட்சக்கணக்கான பராமரிப்பு பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், நாம் முறையான மென்மையான மற்றும் கடினமான திறன் பயிற்சியை உருவாக்க வேண்டும்" என கூறினார்.

நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Next Story