மேகதாது அணை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 10 வரை தடை நீட்டிப்பு..!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை தொடர்கிறது.
புதுடெல்லி,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் கடந்த 20 ஆம் தேதி, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்த தடை இல்லை. மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்கலாம், ஆனால் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எந்த முடிவும் ஆணையம் எடுக்க கூடாது. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த நிலையில் மேகதாது அணை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு.இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை தொடர்கிறது.