'அக்னிபத்' எதிரொலி : அரியனா - குருகிராமில் 144 தடை உத்தரவு


அக்னிபத்  எதிரொலி : அரியனா - குருகிராமில் 144 தடை உத்தரவு
x

அரியானாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருகிராம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரெயில்களுக்கு தீ வைப்பு என இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருவதால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து அரியானாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன. அரியானாவில் போராட்டம் நடைபெறும் சில பகுதிகளில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

அக்னிபத்துக்கு எதிரான போராட்டத்தால் டெல்லி ஐடிஐ மெட்ரோ நிலையத்தின் அனைத்து நுழைவு வாயிலும் மூடப்பட்டது.


Next Story