உடற்பயிற்சி கூடங்களில் வழங்கும் புரோட்டின் பவுடருக்கு தடை விதிக்க நடவடிக்கை-சட்டசபையில் மந்திரி மாதுசாமி தகவல்


உடற்பயிற்சி கூடங்களில் வழங்கும்  புரோட்டின் பவுடருக்கு தடை விதிக்க நடவடிக்கை-சட்டசபையில் மந்திரி மாதுசாமி தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடற்பயிற்சி கூடங்களில் வழங்கும் புரோட்டின்பவுடருக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டசபையில் மந்திரி மாதுசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் சதீஸ்ரெட்டி எழுந்து, உடற்பயிற்சி கூடங்களில் உடல் எடையை குறைக்க புரோட்டின் பவுடர் கொடுக்கிறார்கள். எனது தொகுதியில் சந்தோஷ்குமார் என்ற இளைஞருக்கு அவ்வாறு பெற்ற புரோட்டின் பவுடரை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற ரூ.60 லட்சம் வரை செலவு செய்தனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்துவிட்டார். அதனால் உடற்பயிற்சி கூடங்களில் புரோட்டின் பவுடர் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை மந்திரி மாதுசாமி, "அந்த புரோட்டின் பவுடர் குறித்து விசாரணை நடத்தி அவற்றுக்கு தடை விதிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதைத்தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், "சட்டவிரோதமான முறையில் உடற்பயிற்சி கூடங்களில் வழங்கப்படும் புரோட்டின் பவுடருக்கு தடை விதிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.


Next Story