சிவமொக்கா விமான நிலைய பணிகளை பொதுமக்கள் பார்வையிட தடை


சிவமொக்கா விமான நிலைய பணிகளை பொதுமக்கள் பார்வையிட தடை
x

சிவமொக்கா விமான நிலைய பணிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டு உள்ளார்.

சிவமொக்கா:-

விமான நிலைய பணிகள்

சிவமொக்கா மாவட்டம் ஆயனூரை அடுத்த நாகர்பாவி கிராமத்தில் உள்ள சோகானே பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசு மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விமான நிலைய கட்டிடம் தாமரை பூ போல் வடிமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையப்பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த விமான நிலையம் பிப்ரவரி 27-ந் தேதி திறக்கப்படுகிறது. மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். இந்நிலையில் இந்த விமான நிலையங்களை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

இது குறித்து மாவட்ட கலெக்டர் செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

விமான நிலைய கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் தங்கள் கார், மோட்டார் சைக்கிள்களை விமான நிலையம் ஓடுபாதையில் ஓட்டி செல்கின்றனர். இதனால் ஓடுபாதை சேதமடைகிறது. இதனால் இறுதி பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பிரதமர் மோடி திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பாதுகாப்பு மற்றும்

விமான நிலைய பணிகளை கருத்தில் கொண்டு விமான நிலைய பணிகளை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்துவிடும். அதற்கு முன்னதாக மத்திய விமான பாதுகாப்பு துறையை சேர்ந்த டி.ஜி.சி.ஏ குழுவினர் இந்த பணிகளை பார்வையிடுவதற்கு வருகின்றனர். அவர்கள் ஆய்வு செய்த பின்னர் விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story