கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
x

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தன. இந்த நிலையில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணிக்கு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக பள்ளி தேர்வு வாரியத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்த தேர்வு முடிவுகளை https://karresults.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story