புதுச்சேரி: காவலர் பயிற்சி பள்ளியில் 29 போலீசாருக்கு கொரோனா தொற்று...!


புதுச்சேரி: காவலர் பயிற்சி பள்ளியில் 29 போலீசாருக்கு கொரோனா தொற்று...!
x

புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் 29 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கொரோனா தொற்று

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அவ்வப்போது ஓரிரு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசியை பொதுமக்கள் அதிக அளவில் போட்டு வருகின்றனர்.

இதனிடையே புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி போலீசாருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின. இந்தநிலையில் அங்கு உள்ள பயிற்சி போலீசார் 29 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

29 பேர் பாதிப்பு

இதுதொடர்பான தகவலை சுகாதராத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 31-ந்தேதி 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

காவலர் பயிற்சி பள்ளியில் 29 பேர் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பது பயிற்சி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சி காவலர்கள் மேலும் சிலருக்கு தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு இருப்பதால் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story