மானிய விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல்


மானிய விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
x

சிக்கமகளூருவில் மானிய விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது என்று கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

கொப்பரை தேங்காய்

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வரும் தேங்காயை பறித்து உலர வைத்து கொப்பரை தேங்காயாக விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதனால் அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி கடந்த மாதம் 27-ந்தேதி முதல் கடூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறியதாவது:-

மானிய விலை

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கடூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் விவசாயிகளிடம் இருந்து மானிய விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு குவிண்டால் கொப்பரை தேங்காய் ரூ.11,750-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த மையத்துக்கு வந்து கொப்பரை தேங்காயை விற்பனை செய்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு வங்கி மூலம் பணம் வரவு வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story