நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி இந்தியாவை அவமதிக்கிறார் ராகுல் காந்தி - ராஜ்நாத் சிங் சாடல்


நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி இந்தியாவை அவமதிக்கிறார் ராகுல் காந்தி - ராஜ்நாத் சிங் சாடல்
x

நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி ராகுல் காந்தி இந்தியாவை அவமதிக்கிறார் என்று ராஜ்நாத் சிங் சாடியுள்ளார்.

சிங்ராலி,

இந்தியாவில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்துகிறார் என்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

"பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி, நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறும் ராகுல் காந்தியிடம் கேட்கிறேன். நாட்டில் வெறுப்பை பிறப்பிப்பவர் யார்? நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறுவதன் மூலம் இந்தியா அவமதிக்கப்படுகிறது. ராகுல் உங்களுக்கு என்ன ஆயிற்று?" என்று கூறினார்.

பின்னர் பேசிய அவர், "முன்பு போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் வெடிகுண்டுகள் உட்பட பாதுகாப்புத் துறைக்கான அனைத்தையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால் இப்போது இந்தியாவிலேயே அனைத்தையும் தயாரிக்கவும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் திருப்பி அனுப்பவும் முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக் கட்டத்தில் உள்ளது. வருகிற ஜனவரி 30-ம் தேதி ஸ்ரீநகரில் இந்த யாத்திரை நிறைவடைகிறது.


Next Story