நடைபயிற்சியில் ஈடுபடுகிறார், ராகுல் காந்தி மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கிண்டல்


நடைபயிற்சியில் ஈடுபடுகிறார், ராகுல் காந்தி  மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கிண்டல்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடல்நிலையில் சீர்திருத்தம் ஏற்படும் என்பதற்காக ராகுல்காந்தி நடைபயிற்சியில் ஈடுபடுகிறார் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கிண்டல் செய்துள்ளார்.

தார்வார்:

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசின் ஒற்றுமை பாதயாத்திரையால் ராகுல் காந்தி மற்றும் சித்தராமையாவின் உடல்நிலையில் சீர்திருத்தம் ஏற்படும். ஏனென்றால் அவர்கள் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கிறார். எனக்கு எதிராக அவதூறு பரப்ப பா.ஜனதாவினர் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். நாங்கள் எதற்காக ராகுல் காந்திக்கு எதிராக பொய் பிரசாரம் செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இப்போது அந்த கட்சியின் நிலைமை என்ன என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். எதிர்க்கட்சியில் அமருவதற்கு கூட தகுதி இல்லாத நிலையை அக்கட்சி அடைந்துள்ளது. போட்டியிடும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. அங்கு 388 தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட்டை இழந்தது.

இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.


Next Story