13 நாட்களில் 225 கி.மீ., தூரம் வரை பாத யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி..!
ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பாத யாத்திரையில், கடந்த 13 நாட்களில் 225 கி.மீ., வரை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்,
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் 'பாரத் ஜோடோ' பாத யாத்திரை என்ற நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளர். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் காஷ்மீரில் நிறைவு பெறுகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, 3,750 கி.மீ., தூர பாத யாத்திரை ராகுல் மேற்கொண்டுள்ளார். 50 நாட்கள் திட்டமிடப்பட்ட இந்த பாத யாத்திரை இன்று 13வது நாளை எட்டியுள்ளது. ஆலப்புழாவின் செர்தாலா என்ற இடத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மரக்கன்றை நட்டு வைத்து ராகுல் துவக்கினார். 14 கி.மீ., தூரம் நடந்த ராகுல்காந்தி, குதியதோடு என்ற இடத்தில் மதியம் யாத்திரையை நிறைவு செய்தார்.
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முரளீதரன், பவன் கேரா, வி.டி.சதீசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாத யாத்திரையில் கலந்து கொண்டனர். இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,
கடந்த 13 நாட்களாக நடக்கும் பாத யாத்திரையில் 225 கி.மீ., தூரம் ராகுல்காந்தி கடந்துள்ளார். இன்று 15 கி.மீ., தூரம் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி, இரவு கொச்சி சென்றடைவதாக கூறியுள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணம் முதலில் காரில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. காரில் யாத்திரை என்றால் நான் பங்கேற்க மாட்டேன் என கூறிவிட்டேன் என ராகுல்காந்தி கூறினார். மேலும் காரில் செல்ல முடியாத பல இடங்கள் நாட்டில் உள்ளதால் அவர்களுக்கு மதிப்பளித்து நடை பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது என என தெரிவித்துள்ளார்.