பஞ்சாபில் பாதயாத்திரை தொடங்கும் முன் ராகுல் காந்தி பொற்கோவிலுக்கு செல்கிறார்...!
பஞ்சாபில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு ராகுல்காந்தி செல்கிறார்.
அமிர்தசரஸ்,
பஞ்சாபில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைத் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரியானாவில் ராகுல்காந்தி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில்,
116-வது நாள் ஒற்றுமை நடைப்பயணம் அரியானாவின் அம்பாலாவில் நிறைவு செய்துள்ளது. நாளை காலை பஞ்சாபில் கால் பதிக்க உள்ளோம் என்றார். அமிர்தசரஸில் உள்ள புனிதமான பொற்கோயிலுக்கு நடைப்பயணம் செய்வதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. இன்று பிற்பகல் நடைப்பயணம் இருக்காது என்று அவர் டுவீட் செய்துள்ளார்.முன்னதாக இன்று காலை, அம்பாலா கண்டத்தில் உள்ள ஷாபூரிலிருந்து ராகுல் காந்தி பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினார்.
Related Tags :
Next Story