ராகுல் காந்தி இன்று கர்நாடகம் வருகை


ராகுல் காந்தி இன்று கர்நாடகம் வருகை
x

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். பெலகாவியில் நடைபெறும் இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

பெங்களூரு:

வேலையில்லா திண்டாட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் குரல் என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சட்டசபை தொகுதி வாரியாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்கள். சட்டசபை தேர்தலுக்கு விரைவில் தேதி அறிவிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஏற்கனவே கர்நாடகத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள். பிரதமர் மோடி இதுவரை 6 முறை கர்நாடகம் வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். பெலகாவியில் இன்று நடைபெறும் காங்கிரசின் இளைஞர் புரட்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இதன் மூலம் ராகுல் காந்தி கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் குதிக்கிறார். அவர் வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம் போன்ற விஷயங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

ராகுல் காந்தியின் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பெலகாவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story