மின்சாரம் தாக்கி காயமடைந்த தொண்டர்களிடம் ராகுல் நலம் விசாரித்தார்


மின்சாரம் தாக்கி காயமடைந்த தொண்டர்களிடம் ராகுல் நலம் விசாரித்தார்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் கூறினார்.

பல்லாரி:

பல்லாரியில் நேற்று ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நடந்தது. இந்த பயணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் இரும்பு கம்பியில் காங்கிரஸ் கொடியை கட்டி ஊர்வலம் சென்றனர். அப்போது இரும்பு கம்பி மீது உயர்மின்அழுத்த மின்கம்பி உரசியது. இதில் மோகா கிராம பஞ்சாயத்து தலைவர் ராமண்ணா உள்பட 5 பேரை மின்சாரம் தாக்கியது.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பல்லாரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்ற ராகுல்காந்தி, கர்நாடக காஙகிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, நாகேந்திரா எம்.எல்.ஏ. ஆகியோர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story