ராஜாசீட் சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும்- அதிகாரிகளுக்கு, கலெக்டர் சதீஸ் உத்தரவு
ராஜாசீட் சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.
குடகு: குடகு மாவட்டம் மடிகேரியில் ராஜாசீட் சுற்றுலா தலத்தை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில் குழுவினர் அங்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து கலெக்டர் சதீஸ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கூறியதாவது:- ராஜா சீட் பூங்காவில் முறையாக நுழைவாயில் கதவுகள் இல்லை. டிக்கெட் கவுண்ட்டர்கள் இல்லை. மேலும் பூங்காவில் புதிதாக குழந்தைகள் விளையாடும் லோ ரோப்வே, குழந்தைகள் வலை ஏறுதல், சாகச நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பூங்காவை பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும்.
சுற்றுபுற தூய்மை மிகவும் அவசியம். பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை கழிவுகளை ஆங்காங்கே வீசக்கூடாது. பூங்காவிற்கு வரும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும். இதன்மூலம் ராஜாசீட் சுற்றுலா தலத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.