பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மந்திரி பதவியை பறிக்க கோரிக்கை


பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மந்திரி பதவியை பறிக்க கோரிக்கை
x

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. காங்கிரசை சேர்ந்த கோவிந்த் ராம் மெஹ்வால், பேரிடர் நிர்வாகத் துறை மந்திரியாக உள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது: நம் மக்களை மூடநம்பிக்கைகளில் தள்ளி விடுகின்றனர். மதம், ஜாதி பெயரில் மோதலை ஏற்படுத்தி வருகின்றனர். கர்வா சவுத் பண்டிகையின்போது, நம் பெண்கள் விரதம் இருந்து, சல்லடை வாயிலாக நிலவை பார்க்கின்றனர். கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றனர். அதே நேரத்தில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், பெண்கள் அறிவியலில் சிறந்து விளங்குகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நம் நாட்டு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் கோவிந்த் ராம் மெஹ்வால் பேசியுள்ளார். இதற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது மந்திரி பதவியை முதல்-மந்திரி பறிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story