அஜ்மீரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கெலாட்-பைலட் ஆதரவாளர்கள் இடையே மோதல்

அஜ்மீரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கெலாட்-பைலட் ஆதரவாளர்கள் இடையே மோதல்
x
தினத்தந்தி 19 May 2023 2:45 AM IST (Updated: 19 May 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-மந்திரிக்கு எதிராகவே சச்சின் பைலட் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-மந்திரிக்கு எதிராகவே சச்சின் பைலட் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அஜ்மீரில் நேற்று காங்கிரஸ் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் அசோக் கெலாட்-சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அத்துடன் தங்கள் தலைவர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அத்துடன் காயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story