காஷ்மீர்: மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரம்!


காஷ்மீர்: மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரம்!
x

நாடு முழுவதும் சுதந்திர தினத்துக்காக தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

ஸ்ரீநகர்,

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சுதந்திரதின பெருவிழா வெகுவிமைசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

அதன்படி, ஒவ்வொரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துமாறு பிரதமர் உட்பட பல தலைவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச ரஜோரி மாவட்ட பெண்கள், சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக தேசியக்கொடிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ரஜோரி மாவட்டத்தில் 20,000 கொடிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம், தேசியக்கொடியை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்த ஒரு பெண் கூறுகையில், "எனது குழுவிற்கு 2000 கொடிகள் தயாரிக்க இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அவை அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

நாங்கள் முழு உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொடிகளை உருவாக்குகிறோம், இதுவரை 500-1000 கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்றார்.


Next Story