ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி- முழு அடைப்பு போராட்டம்


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி- முழு அடைப்பு போராட்டம்
x

பயங்கரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு முன்பாக கூடிய பொதுமக்கள் பாகிஸ்தானை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஜம்மு,

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட மேல் டாங்கிரி கிராமத்தில் நேற்று மாலையில் ஆயுதங்களுடன் 2 மர்ம நபர்கள் நுழைந்தனர். அங்கு தனித்தனியாக இருந்த 3 வீடுகளில் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் அந்த வீடுகளில் வசித்து வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரத்தை அரங்கேற்றிய அந்த மர்ம நபர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அவர்கள் அந்த பகுதிகளை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதல்தான் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பயங்கரவாதிகளின் தக்குதலை கண்டித்தும் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று சில அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பிற்கு பாஜகவும் ஆதரவு கொடுத்துள்ளது. முன்னதாக பயங்கரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு முன்பாக கூடிய பொதுமக்கள் பாகிஸ்தானை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதேபோல் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்காவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.


Next Story