காரைக்காலில் 'ரக்ஷா பந்தன்' திருவிழா - 70 பேர் பங்கேற்பு
காரைக்காலில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் திருவிழாவில் 70 பேர் கலந்து கொண்டனர்.
காரைக்கால்,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரம்மா குமாரிகள் அமைப்பினர் சார்பாக, நேற்று மாலை காரைக்கால் தாவீது பிள்ளை வீதியில் அமைந்துள்ள இராஜ யோக தியான நிலையத்தில் ரக்ஷா பந்தன் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கு வந்த அனைவருக்கும் புனிதா கயிறு அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தியான பயிற்சியும் அளித்தார். விழா ஏற்பாடுகளை காரைக்கால் பிரம்மா குமாரிகள் கிளை பொறுப்பினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story