ராமநகரில் வளர்ச்சி பணிகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா?- மந்திரி அஸ்வத் நாராயணுக்கு குமாரசாமி சவால்


ராமநகரில் வளர்ச்சி பணிகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா?- மந்திரி அஸ்வத் நாராயணுக்கு குமாரசாமி சவால்
x

ராமநகரில் வளர்ச்சி பணிகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று மந்திரி அஸ்வத் நாராயணுக்கு குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ராமநகர் மாவட்டத்தில் எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பகிரங்க விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன். இதற்கு இந்த மாவட்ட பொறுப்பு மந்திரி அஸ்வத் நாராயண் தயாரா?. வளர்ச்சி பணிகள் என்றால் என்ன, குறுக்கு வழி என்றால் என்ன. இந்த இரண்டிலும் அஸ்வத் நாராயணுக்கு நல்ல அனுபவம் உள்ளது. அதிகாரிகளை தனது கைக்குள் வைத்து கொண்டு திருட்டுத்தனமாக வளர்ச்சி பணிகள் தொடக்கும் நிகழ்ச்சி நடத்த முயற்சி செய்தது சரியா?. நான் நினைத்திருந்தால் மல்லேஸ்வரம் தொகுதியில் அஸ்வத் நாராயண் எம்.எல்.ஏ. கூட ஆகியிருக்க முடியாது. ஆபரேஷன் தாமரை மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து தத்துவம் பேசுகிறார். எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் பணம் வைத்துவிட்டு வந்தது ஏன்?.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.


Next Story