செல்போனை ஒப்படைக்கிறேன்: ஆபாச வீடியோ புகாரில் விசாரணைக்கு தயார் - ஜார்கண்ட் மந்திரி அறிவிப்பு


செல்போனை ஒப்படைக்கிறேன்: ஆபாச வீடியோ புகாரில் விசாரணைக்கு தயார் - ஜார்கண்ட் மந்திரி அறிவிப்பு
x

எனது நற்பெயரை கெடுக்க சதி நடக்கிறது. எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று ஜார்க்கண்ட் மந்திரி தெரிவித்தார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி பன்னா குப்தா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர், ஆபாசமான கோலத்தில் ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசுவது போன்ற வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இச்சம்பவம் குறித்து பன்னா குப்தா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எனது நற்பெயரை கெடுக்க சதி நடக்கிறது. எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். போலீசில் புகார் அளித்துள்ளேன். எனது செல்போனையும், அந்த பெண்ணின் செல்போனையும் வாங்கி சரிபார்க்குமாறு போலீசிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story