சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மதுபாட்டிகள் மீட்பு


சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மதுபாட்டிகள் மீட்பு
x

பங்காருபேட்டையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மதுபாட்டிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

கோலார் தங்கவயல்:-

கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக பங்காருபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பங்காருபேட்டை போலீசார் நகரில் உள்ள பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் வைத்திருந்த பைகளை வாங்கி சோதனை செய்தனர். பைகளில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனே பைகளை பறிமுதல் செய்த போலீசார் அதில் ரூ.4ஆயிரம் மதிப்பிலான 46.5 லிட்டர் மதுபாட்டிகள் இருந்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணா என்பது தெரியவந்தது. அவர் இங்கிருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி ஆந்திராவிற்கு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story