இறைச்சிக்காக கடத்திய 2 பசுமாடுகள் மீட்பு


இறைச்சிக்காக கடத்திய 2 பசுமாடுகள் மீட்பு
x

இறைச்சிக்காக கடத்திய 2 பசுமாடுகளை மீட்ட போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

மங்களூரு:-

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கங்கொல்லி போலீஸ் எல்லைக்குட்பட்ட அரத்தே பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, மினிலாரியில் 2 பசுமாடுகள் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து மினிலாரியில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஜோசப் டிசோசா, உஸ்மான் என்பதும், அவர்கள் இறைச்சிக்காக மாடுகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பசுமாடுகளும் மீட்கப்பட்டது. இதுகுறித்து கங்கொல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story