உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது  - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து உக்ரைனில் மருத்துவ படிப்பு பயின்று வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பி இருந்தார்கள்.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, அவர்கள் தங்கள் கல்வியை இங்கவே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, இதுதொடர்பான வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இந்த தகவலை அளித்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை என்றும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை முதன்மை மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடியாது என்றும்,அதிகப்படியான கட்டணத்தை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களால் செலுத்தவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story