சிவமொக்காவில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்துறை அதிகாரி கைது


சிவமொக்காவில்  ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்துறை அதிகாரி கைது
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 12 April 2023 6:46 PM GMT)

சிவமொக்காவில் வீடு கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

சிமொக்கா டவுன் ஒட்டினகொப்பா பகுதியை சேர்ந்தவர் ஹாலேசப்பா. இவர் புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரி மஞ்சுநாத் என்பவரிடம் விண்ணப்பித்தார். மனுவை பெற்று கொண்ட வருவாய்த்துறை அதிகாரி மஞ்சுநாத், ஹாலேசப்பாவிடம் சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹாலேசப்பா, சிவமொக்கா லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

அவர்கள் ஹாேலசப்பா சில அறிவுரைகளை வழங்கி ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்து அனுப்பினர். ஹாேலசப்பா வருவாய்த்துறை அதிகாரி மஞ்சுநாத்திடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் மஞ்சுநாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story