மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி
மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாட்னா,
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ். கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கபட்டு மருத்துவமனைக்கும் சென்றும் வீட்டிலேயேயும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
லாலு பிரசாத் யாதவால் தானாக எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை. அருகில் உள்ள வாஷ் ரூமுக்கு கூட அவரால் நடக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், லாலு பிரசாத், வீட்டு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சைகாக பாட்னா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story