துணை தேர்தல் கமிஷனராக ஆர்.கே.குப்தா நியமனம்..!


துணை தேர்தல் கமிஷனராக ஆர்.கே.குப்தா நியமனம்..!
x

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் கமிஷனராக ஆர்.கே.குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் கமிஷனராக ஆர்.கே.குப்தா நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஸ்ரீகாந்துக்கு பதிலாக ஆர்.கே.குப்தா நியமிக்கப்படுகிறார்.

மத்திய செயலக சேவை அதிகாரியான குப்தா, அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை துணைத் தேர்தல் கமிஷனராக பணியாற்றுவார் என்று பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story