மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!


மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!
x

இந்த பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 ரூபாய் வழங்கப்படும்

ரேவா,

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி அந்த பஸ் சென்று கொண்டிருந்து உள்ளது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநில மக்கள் என ரேவா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நவ்னீத் பசின் கூறியுள்ளார். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்,

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story