தெலுங்கானா பள்ளியில் டீச்சருக்கு பதில் பாடம் எடுக்கும் ரோபோ...!


தெலுங்கானா பள்ளியில் டீச்சருக்கு பதில் பாடம் எடுக்கும் ரோபோ...!
x

தெலுங்கானா பள்ளிகளில் டீச்சருக்கு பதிலாக ரோபோ பாடம் சொல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐதராபாத்,

ஈகிள் ரோபோ எனப்படும் இளம்பெண் போன்ற உருவம் கொண்ட பெண் ரோபோக்கள் தற்போது மராட்டியம், ஆந்திரா தனியார் பள்ளிகளில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த ரோபோக்கள் இளம் பெண் ஆசிரியை போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் திறன் பெற்றது.

ஈகிள் ரோபோ என்ற இளம்பெண் போன்ற உருவம் கொண்ட பெண் ரோபோக்கள் தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தி வருகின்றன. இந்த ரோபோ ஒரு ஆசிரியர் எப்படி பாடம் எடுக்கின்றாரோ அதேபோல் துல்லியமாக படம் எடுத்து வருகின்றன. பாடம் நடத்தி முடித்ததும் மாணவர்களின் சந்தேகங்களுக்கும் இந்த ரோபோ பதில் அளிக்கிறது.

இதனை அடுத்து விரைவில் அரசு பள்ளிகளில் ரோபோ பாடம் நடத்தும் முறை அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக ரோபோ பாடம் எடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டால் ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநில கல்வி மந்திரி முன்னிலையில் இந்த ரோபோவின் செயல்பாடு விளக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோ கல்வித் திட்டம் வெற்றியடைந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இவற்றை பாடம் எடுக்க அனுமதிக்க வேண்டுமென இந்த ரோபோவின் தயாரிப்பாளர்கள் மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story