ஜோக் நீர்வீழ்ச்சியில் ரோப் கார் திட்டம்


ஜோக் நீர்வீழ்ச்சியில் ரோப் கார் திட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜோக் நீர்வீழ்ச்சியில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ராகவேந்திரா எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவமொக்கா:-

ஜோக் நீர்வீழ்ச்சி

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை மேம்படுத்தவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தரப்பில் மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாநில சுற்றுலாத்துறை தரப்பில் அந்த நீர்வீழ்ச்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. மேலும் ஜோக் நீர்வீழ்ச்சியில் ரோப் கார் திட்டத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜோக் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சிவமொக்கா எம்.பி. ராகவேந்திரா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ரோப் கார் திட்டத்துக்கான வரைபடத்தையும் அவர் பார்வையிட்டார். இதைத்தவிர ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

ரோப் கார் திட்டம்

ஜோக் நீர்வீழ்ச்சியில் ரோப் கார் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும், எங்கிருந்து எங்கு வரை ரோப் கார் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து ராகவேந்திரா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜோக் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தேன். ரோப் கார் திட்டப்பணிகள் அமைக்க மத்திய அரசில் இருந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியை கொண்டு பணிகளை தொடங்க இருக்கிறோம். மழைகாலம் வருவதற்குள் திட்டப்பணிகளை துரிதமாக முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்றார்.


Next Story