ரவுடி படுகொலை; மா்மநபர்களுக்கு வலைவீச்சு
மைசூரு டவுனில் ரவுடி படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மைசூரு:
மைசூரு டவுன் பகுதியை சோ்ந்தவர் சுனில் (வயது 22). இவர் ரவுடி ஆவார். இவருக்கும் அந்த பகுதியை சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவா்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏறபட்டு வந்துள்ளது. மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் தேவராஜா மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அவரை தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவராஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கொலையான சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.ஆர். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோம் காரணமாக தான் கொலை நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரியவந்தது. கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.