மங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்


மங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு விமான நிலையத்தில் கடந்த 16 நாட்களில் ரூ.1½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மங்களூரு:

சர்வதேச விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூா் போன்று வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விமான நிலையத்தில் மத்திய தொழில்நுட்பு துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலைய போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் என பல்வேறு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ரூ.1 கோடி 59 லட்சம் தங்கம்

இந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் கடந்த 8-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 16 நாட்களில் துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் உள்ளாடை மற்றும் உடைமைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 3 கிலோ 124 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.59 கோடி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story