கல்லூரி மாணவரின் வங்கிக்கணக்கில் ரூ.18¾ லட்சம் 'அபேஸ்'- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கல்லூரி மாணவரின் வங்கிக்கணக்கில் ரூ.18¾ லட்சம் அபேஸ்-  மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவரின் வங்கிக்கணக்கில் ரூ.18¾ லட்சம் ‘அபேஸ்' செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

உப்பள்ளி: உப்பள்ளி வித்யா நகரை சேர்ந்தவர் அரவிந்த். இவர், ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் நிதி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை அரவிந்த் பார்த்தார். அந்த விளம்பரத்தில் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் நிதிநிறுவனத்தில் உறுப்பினராக சேர வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளனர்.

இதை நம்பிய அரவிந்த்தும், விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு தனது வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து மர்மநபர்கள், அரவிந்த்தின் வங்கிக்கணக்கில் இருந்து தவணை, தவணையாக ரூ.18.84 லட்சத்தை எடுத்து அபேஸ் செய்துள்ளனர். இதனை சமீபத்தில் அறிந்து அதிர்ச்சி அடைந்த அரவிந்த், உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.



Next Story