விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டுவின் தாய்க்கு ரூ.30 லட்சம் காப்பீடு தொகை


விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டுவின் தாய்க்கு ரூ.30 லட்சம் காப்பீடு தொகை
x

சிக்கமகளூருவில் பணியின்போது விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டுவின் தாய்க்கு ரூ.30 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டது.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சிங்கட்டிகெரேயை சேர்ந்தவர் வசந்த்குமார்(வயது 30). இவர், என்.ஆர்.புரா போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடூர்-சிக்கமகளூரு சாலை சிங்கட்டிகெரே என்னும் இடத்தில் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தார்.

அப்போது சாலையில் வந்த கார் ஒன்று வசந்த்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வசந்த்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பணியின்போது விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு வசந்த்குமாரின் தாய்க்கு, போலீஸ்துறை சார்பில் காப்பீடு தொகையாக ரூ.30 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

அதாவது சிக்கமகளூரு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வசந்த்குமாரின் தாய்க்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திரா மற்றும் வங்கி அதிகாரிகள் ரூ.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.


Next Story